ஆட்பதிவு திணைக்கள சேவைகளை ஒக்டோபர் 04 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வரையறுக்கப்பட்ட அளவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, திணைக்களத்தின் தலைமை அலுவலம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் சேவைகளும் மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இருப்பினும், தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கிராம அலுவலர்களால் உறுதிப்படுத்தப்பட்டு, உரிய பிரதேச செயலகத்தில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அல்லது இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் அவசர தேவையின் அடிப்படையில், தேசிய அடையாள அட்டைகளைப் பெற விரும்புவோர் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அல்லது காலி மாகாண அலுவலகத்திற்கு வரும் பொருட்டு, வாரத்தின் அலுவலக நாட்களில் உரிய பிரதேச செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள ஆட்பதிவு பிரிவின் மூலம் அல்லது கீழுள்ள தொலைபேசி இலக்கம் மூலம் முற்பதிவு செய்து நாளொன்றை பெறுவது அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பத்தரமுல்ல தலைமை அலுவலகம் 0115 226 126/ 0115 226 100
- வட மாகாண அலுவலகம் 024 222 7201
- கிழக்கு மாகாண அலுவலகம் 065 222 9449
- வடமேல் மாகாண அலுவலகம் 037 555 4337/037 222 4337
- தென் மாகாண அலுவலகம் 091 222 8348