- 011 2 677 877 எனும் இலக்கம் மூலம் முற்பதிவு அவசியம்
- காலவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர கால எல்லை மேலும் நீடிப்பு
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வேரஹெர அலுவலகங்கள் நாளை (01) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுமித் அளககோன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடக அறிவித்தலொன்றை விடுத்துள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய 011 2 677 877 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு, முற்பதிவு செய்து திகதி, நேரத்தை பெற்றுக் கொண்டவர்களுக்கு, இறுக்கமான சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி சேவைகளை சேவைகளை பெற முடியும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள மாவட்ட நடவடிக்கைகள் அந்தந்த மாவட்ட செயலாளர்களின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக தகவல்கள் அவசியமாயின்,
- அலுவலக நாட்களில் மு.ப. 9.00 - பி.ப. 4.00 மணி வரை,
- வாகன பதிவு தொடர்பில் - 070 7677877
- சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் - 070 7677977
- கடமை நேரத்தின் பின்னர் WhatsApp/Viber/SMS மூலம் குறித்த தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர கால எல்லை மேலும் நீடிப்பு
இவ்வருடம் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் செப்டம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், காலாவதியான நாளிலிருந்து மேலும் ஒரு வருடம் நீடிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சினால் இது தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வருடம் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் எதிர்வரும் வருடம் மார்ச் 31ஆம் திகதிக்குள் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், அவை காலாவதியாகும் தினத்திலிருந்து மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது...