தடுப்பூசி நன்கொடையை இரட்டிப்பாக்கிய பிரான்ஸ்

பிரான்ஸ் ஏழை நாடுகளுக்கான தடுப்பு மருந்து இரண்டு மடங்காக்கப்படும் என்று உறுதி தெரிவித்துள்ளது.

ஏழை நாடுகளுக்கு 120 மில்லியன் முறை போடத் தேவையான தடுப்பு மருந்து அனுப்பப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கூறினார். அது பிரான்ஸில் போடப்பட்டதைவிட அதிக அளவு என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர், இந்த எண்ணிக்கை 60 மில்லியன் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அண்மையில், அமெரிக்காவும் அதன் தடுப்புமருந்தின் அளவை இரட்டிப்பாக்கவிருப்பதாகக் கூறியிருந்தது.

இதன்படி அமெரிக்கா 1.1 பில்லியன், ஐரோப்பிய ஒன்றியம் 500 மில்லியன் மற்றும் சீனா 2 பில்லியன் தடுப்பு மருந்துகளை ஏழை நாடுகளுக்கு வழங்க வாக்குறுதி அளித்துள்ளன. இருப்பினும் தடுப்புமருந்துகளில் எத்தனை தானமாகவும் எத்தனை விற்பனைக்காகவும் வழங்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.