முதல் முறையாக உலகளாவிய ஸ்மார்ட்போன் தரவரிசையில் முதல் 6 இடங்களில் realme

முதல் முறையாக உலகளாவிய ஸ்மார்ட்போன் தரவரிசையில் முதல் 6 இடங்களில் realme-Realme Named as a Top 6 Smartphone Vendor in the Global Rankings

- Counterpoint தகவல் வெளியீடு

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான realme, உலகளாவிய ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள் தரவரிசையில் முதல் 6 இடங்களில்  வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தொழில்துறை தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளும் நிறுவனமான, Counterpoint இனது, 2018ஆம் ஆண்டின் 3ஆவது காலாண்டு முதல் 2021 இரண்டாவது காலாண்டு வரையிலான தரவுகளின் அடிப்படையில், மூன்றே வருட இடைவெளியில் realme ஆனது, இச்சாதனையை படைத்துள்ளதை இத்தரவுகள் காட்டுகின்றன.

இது உலக அரங்கில் ஸ்மார்ட்போன் தரக்குறியிடொன்று அடைந்துள்ள மிகப் பாரிய சாதனையாகும். ஷென்சென் (Shenzhen) நகரை தலைமையகமாகக் கொண்ட ஒரு சிறிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளராக ஆரம்பிக்கப்பட்ட realme ஆனது, 'மாபெரும் சவால் மிக்கவராக' வளர்ந்து, உலகின் தலைசிறந்த தரக்குறியீடுகளில் ஒருவர் எனும் இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நுழைவதற்கு அதிக தடைகளையும், வாடிக்கையாளர் திருப்தியை அடைவதில் அதிக தடைகளையும் கொண்ட, அதிக போட்டி மிக்க சந்தையாக அறியப்படும் இத்துறையில், லேசர் மையப்படுத்தப்பட்ட இலக்கை மனதில் கொண்டு அதன் நிறுவுனர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி ஸ்கை லி (Sky Li) realme இனை நிறுவினார்.

அது இளம் தலைமுறை கையடக்கத் தொலைபேசி நுகர்வோரின் கனவுகளை நனவாக்கும் வகையில், உற்சாகம் மிக்க எதிர்காலத்தை நோக்கி ஒன்றிணைந்து பயணிக்கிறது. Nondescript தரக்குறியீடாக ஆரம்பிக்கப்பட்ட  realme, அனைத்து தொழில்துறைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி, உலகளாவிய ரீதியில் 61 சந்தைகளுக்கு மேல் அதனை விரிவுபடுத்தியுள்ளது.

அது 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், 18 சந்தைகளில் முதல் 5 இடங்களிலுள்ள தரக்குறியீடாக தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் முதல் இடத்திலும், இந்தியா மற்றும் ரஷ்யாவில் நான்காவது இடத்திலும், ஐரோப்பிய பிராந்தியத்தில் ஐந்தாவது இடத்திலும் தனக்கான இடத்தை பதிவு செய்துள்ளது.

ஆய்வு நிறுவனமான Strategy Analytics இன் தரவுகளுக்கமைய, மிக விரைவாக 100 மில்லியன் ஸ்மார்ட்போன்களை சந்தைக்கு வெளியிட்ட தரக்குறியீடு எனும் மைல்கல்லை realme கடந்த மாதம் அடைந்துள்ளது.

இந்த அற்புதமான வெற்றி ஒரே இரவில் நிகழ்ந்த ஒன்றல்ல. realme ஆனது, ஒரு இளம் தரக்குறியீடாக இருப்பதன் காரணமாக, அதன் வணிக உத்திகளில் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு ஆபாய நிலைகளை தாண்ட வேண்டியதாக இருந்தது.

உலகளாவிய ரீதியில் அடைதல், நுகர்வோரின் கோரிக்கைகளை செவிசாய்ப்பதற்காக அதன் காதுகளை தரை வரை வைத்திருக்க வேண்டிய நிலை, அழகான வடிவமைப்புடன், உயர்தர மற்றும் மிக மேம்பட்ட தொழில்நுட்பங்களை இணைத்தவாறு பயனர் நட்பு தயாரிப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தடைகளை அது கடந்து வந்துள்ளது.

இம்முயற்சிகள் யாவும் இளம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்ததோடு, அவர்கள் realme இனை நோக்கி மிக விரைவாக வருவதற்கும் அதன் ஆதரவாளர்களாக  அவர்களை மாற்றுவதற்கும் காரணமாக அமைந்தன.