உலக நிலைபெறுதகு இலக்குகளுக்கு ஏற்ப சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதே நோக்கு

உலக சுற்றுலா தின செய்தியில் பிரதமர்

உலக நிலைபெறுதகு இலக்குகளுக்கு ஏற்ப சுற்றுச்சூழல்-கலாசாரத்திற்கு உகந்த வகையில் சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டு செயற்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ள அவர்,

சுற்றுலாத் துறையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக, கலாசார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பு பற்றி சர்வதேச சமூகத்திற்கு தெரிவிக்க ஐக்கிய நாடுகளின் முக்கிய நிறுவனமான உலக சுற்றுலா அமைப்பினால் (UNWTO) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியொன்றை வழங்குவது குறித்து பெருமை அடைகிறோம்.

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது . நாட்டில் சுமார் மூன்று மில்லியன் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வாழ்வாதாரமாகவும், வணிக நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும் அமைந்துள்ள இந்த சுற்றுலாத்துறை எமது நாட்டிற்குஅந்நிய செலாவணி வருவாயை அளிக்கும் முக்கிய மார்க்கமாக இருக்கிறது என்பதை நன்றியுடன் நினைவூட்ட வேண்டும். யுத்தம் முடிவடைந்த பின்னர் நிலவிய அமைதியான சூழல் நாட்டில் சுற்றுலா துறையில் துரித வளர்ச்சிக்கு பங்களித்தது என்பது இரகசியமல்ல. இருப்பினும், நாட்டில் ஏற்பட்ட பாதுகாப்பின்மை மற்றும் கோவிட் பேரழிவு காரணமாக சுற்றுலாத் துறையும் அதனுடன் தொடர்புடைய மக்களும் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களை பாதுகாத்து, இந்த பேரழிவிற்கு முகங்கொடுக்கும் சவாலுக்கு முகங்கொடுத்துள்ள அரசாங்கம் தடுப்பூசி ஏற்றுவதை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் முன்னேற்றத்திற்கு ஏற்ப,வீழ்ச்சியடைந்து வணிகங்களை மீண்டும் கட்டியெழுப்ப தேவையான சூழலை உருவாக்க முடிந்தது.

விண்வெளி சுற்றுலா சகாப்தத்தின் ஆரம்பத்துடன் உலகளாவிய சுற்றுலாத் துறையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.

உலக நிலைபெறுதகு இலக்குகளுக்கு ஏற்ப சுற்றுச்சூழல்-கலாசாரத்திற்கு உகந்த வகையில் சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். (பா).