வெள்ளை மாளிகை முன்பாக மக்கள் திரண்டு இந்திய பிரதமருக்கு வரவேற்பு

வெள்ளை மாளிகை முன்பாக மக்கள் திரண்டு இந்திய பிரதமருக்கு வரவேற்பு-Indians in USA Welcome Narendra Modi In Front of White House

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று வெள்ளை மாளிகைக்கு வெளியில் இந்தியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக ஏஎன்இ செய்திச் சேவை தெரிவித்தது. "அவரை இங்கு வரவேற்பதை பாக்கியமாக கருதுகிறோம். அவர் ஒரு நம்பிக்கைக்குரிய தலைவர்.அவரால் இந்தியாவை உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும்" என்று ஒரு ஆதரவாளர் கூறினார்..

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பை நடத்தினார். இதனையொட்டி வெள்ளை மாளிகைக்கு முன்பாக திரண்ட பொதுமக்கள் அவரை வரவேற்று மகிழ்ந்தார்கள்.

'குவாட்' மாநாடு மற்றும் ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திப்பதற்காக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். பிரதமராக பதவியேற்ற பின் அமெரிக்காவுக்கு ஏழாவது முறையாக மோடி சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்ற பின், அவரை தற்போது தான் பிரதமர் மோடி நேரடியாக சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவை மேம்படுத்துவது, பரஸ்பரம் ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், கொரோனா, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.