அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை கிரிக்கெட் அணிக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை கிரிக்கெட் அணிக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஆஷாத் எம் ஹனீபா வைத்தியசாலை நலன்புரி சங்கத்திடம் வழங்கிவைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பொது வைத்திய நிபுணராக கடமையாற்றிச் சென்ற டொக்டர் எம். அஹமட் பரீட் அனுசரணையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அக்கரைப்பற்று கிளையின் ஏற்பாட்டில் வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்திற்கு இப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. நலன்புரிச் சங்கத்தின் தலைவர் டொக்டர் அப்துல் றசாக் மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

(அக்கரைப்பற்று மத்திய நிருபர்)