பேயாக மிரட்டும் ரெஜினா!

கண்ட நாள் முதல் திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னட ஆகிய மொழி திரைப்படங்களில் நடி த்து பிரபலமானவர்.

தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன் சரவணன் இருக்க பயமேன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தற்பொழுது இயக்குனர் கார்த்திக் ராஜா இயக்கத்தில் ராஜ்சேகர் வர்மா தயாரிப்பில் உருவான திகில் மற்றும் திரில்லர் திரைப்படமான சூர்ப்பனகை திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் இப்படத்தில் இவர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆக நடித்து வருகிறார். மேலும் இத்திரைப்படத்தில் ஜெயப்பிரகாஷ், மன்சூர் அலிகான், அக்ஷரா கவுடா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் இப்படத்தை இசையமைப்பாளர் சாம் சி .எஸ் இசையமைத்துள்ளார்.

கடந்த செவ்வாய் கிழமை இப்படத்தின் ட்ரைலர் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் லிங்குசாமி ஆகியோரால் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

மேலும் ரெஜினா கசாண்ட்ரா நடிகர் அருண் விஜயுடன் இணைந்து நடிக்கும் பார்டர் திரைப்படம் விரைவில் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.