பயங்கரவாதத்தை சில நாடுகள் அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றன

- ஐ. நா அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி

பயங்கரவாதத்தை சில நாடுகள் அரசியல் கருவியாக பயன்படுத்துவதாக தெரிவித்த பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் குறித்து கவலையை வெளிப்படுத்தினார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி நேற் உரையாற்றினார்.

ஆப்கான் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகாமல் நாம் அனைவரும் அவர்களை காக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு விவகாரங்களில் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார்.

உலகிற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்ததோடு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் வளர்ந்தால் அது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகிவிடும் என்றும் சுட்டிக்காட்டினார். அச்சமின்றி நாம் நமது இலக்கை நோக்கி முன்னேறினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் குறிப்பிட்ட அவர், 12 வயது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். குறிப்பாக கொரோனா தடுப்பூசி குறித்து பேசும் போது, "உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை நான் ஐநா சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதை 12 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் கொடுக்கலாம். ஒரு எம்ஆர்என்ஏ தடுப்பூசி வளர்ச்சியின் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்திய விஞ்ஞானிகளும் கோவிட் -19 க்கு எதிராக சொட்டுமருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பூசி, எம்ஆர்என்ஏ தடுப்பூசி ஆகியவற்றை உருவாக்கி வருகிறார்கள்.

பொருளாதாரம் உலகளாவிய பொருளாதாரம் மேலும் பன்முகப்படுத்தப்பட வேண்டும் என்பதை கொரோனா தொற்றுநோய் உலகிற்கு கற்பித்தது. அதனால்தான் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளின் விரிவாக்கம் மிகவும் முக்கியமானது. எங்களது 'ஆத்மநிர்பர் பாரத் அபியான்' திட்டம் இந்த உணர்வால் தான் உருவாக்கப்பட்டது

பகுத்தறிவு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், இந்திய மாணவர்கள் உருவாக்கிய 75 செயற்கைக்கோள்களை இந்தியா விண்வெளிக்கு அனுப்பப் போகிறது. இத்தகைய சூழ்நிலையில், முழு உலகமும் அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சிந்தனையை வளர்ச்சிக்கு அடிப்படையாக மாற்ற வேண்டும். அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையை வலுப்படுத்தும் பொருட்டு, இந்தியா அனுபவம் சார்ந்த கற்றலை ஊக்குவிக்கிறது.

இந்தியாவை உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் மையமாக மாற்றுவதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளோம். சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. நாம் நமது வருங்கால சந்ததியினருக்குப் பொறுப்பானவர்கள், பொருளாதார வளர்ச்சி , சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா செயல்படுகிறது." இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.