ஐ.பி.எல். கிரிக்கெட்: ரோகித் சர்மா புதிய சாதனை

ஐ.பி.எல்.லில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா, அணி ஒன்றுக்கு எதிராக ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஐ.பி.எல். போட்டியின் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில், நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

இதில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோகித் சர்மா, ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் 3வது ஓவரில் வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தில் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.