மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை முன்னேற்ற பாரிய அபிவிருத்திகள்

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின்  வோண்டுகோளின் பேரில் நடவடிக்கை

இளைஞர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை கட்டியெழுப்பவும், வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பத்தை நிரப்பவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல்களை வழங்கவும், டிஜிட்டல் தொழில்நுட்ப தொழிற்பயிற்சியில் கவனம் செலுத்தவும், பொழுதுபோக்கிற்காக நடனம் உள்ளிட்ட கலாசார ரீதியாக ஒருங்கிணைந்த மையங்கள் உருவாக்கம்..

மட்டக்களப்பு மாவட்டத்தின் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்காக நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானங்கள்,கிராமிய மட்டத்தில் டேபிள் டென்னிஸ், பூப்பந்து, வூஷூ, கராத்தே மற்றும் குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலைகளுக்கு விளையாட்டு பொருட்கள் மற்றும் பயிற்சியாளர்களை பெற்றுக்கொள்வது தொடர்பிலும். அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் ஈடுபடுத்தவும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பல முன்மொழிவுகளை தெரிவித்திருந்தார். வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார்

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வேண்டுகோளின் பேரில் நாமல் ராஜபக்ஷ நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிந்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கும் கிராமிய விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் வந்தாரமுனை டயமன்ஸ் விளையாட்டு மைதானம், மீராங்கனி பார்த்தாத் கிராமிய விளையாட்டு மைதானம், கோட்டைக்கல்லாறு கிராமிய விளையாட்டு மைதானம் ஆகியன முதல்கட்ட வேலைத்திட்டத்துக்காக விளையாட்டுத்துறை அமைச்சின் 1.5 மில்லியன் ரூபா நிதி ஒதுகீட்டில் நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களை கையளிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன, மட்டக்களப்பு மாவட்டத்தின் பால் உற்பத்தியாளர்கள்,பண்ணையாளர்களின் குறைகளை கேட்டறிவதற்காக கரடியனாறு அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தில் சென்று பண்ணையாளர்களது பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர்

இதன்போது பண்ணையாளர்களால் தெரிவித்ததாவது,..

நாட்டின் பால் உற்பத்தியில் கிழக்கு மாகாணம் 18 வீதமான பங்களிப்பினை வழங்குவதாக சுட்டிக்காட்டிய பண்ணையாளர்கள் தமக்கு பண்ணைகளை அமைப்பதற்காக இரண்டு ஏக்கர் வீதம் காணிகளை கோறியதுடன்,நீண்டகால பிரச்சனையாகவுள்ள மேச்சல் தரை பிரச்சினையினையும் தீர்த்துத்தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

இந்த கண்காணிப்பு விஜயத்தின்போது பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் - கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே . நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன்,தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன் ஆகியோரும் விஜயத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் மையங்களை நிறுவுவதற்கும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இளைஞர் மையங்கள், இளைஞர் அமைப்புகள் அல்லது இளைஞர் கழகங்கள் போன்றதல்ல. இதன் மூலம் இளைஞர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை கட்டியெழுப்பவும், வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பத்தை நிரப்பவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல்களை வழங்கவும், டிஜிட்டல் தொழில்நுட்ப தொழிற்பயிற்சியில் கவனம் செலுத்தவும், பொழுதுபோக்கிற்காக நடனம் உள்ளிட்ட கலாசார ரீதியாக ஒருங்கிணைந்த மையத்தை உருவாக்குதவற்கே இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

இரா.சுரேஸ்குமார்

அமைச்சரின் ஊடக இணைப்பாளர்