பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் - மத்திய வங்கி ஆளுநர் இடையே சந்திப்பு

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் - மத்திய வங்கி ஆளுநர் இடையே சந்திப்பு-Governor of the CBSL Met with Bangladesh High Commissioner

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், அஜித் நிவாட் கப்ரால் மற்றும் இலங்கைக்கான பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் தாரிக் எம்டி ஆரிபுல் இஸ்லாம் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் நேற்று (24) இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, இரு தரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பங்களாதேஷின் ஏற்றுமதிகளுக்காக கொழும்பு துறைமுகத்தை உச்ச வகையில் பயன்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

அந்நிய செலாவணி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவும் வகையில் பரிமாற்ற அடிப்படையில் பங்களாதேஷினால் இலங்கைக்கு (மத்திய வங்கிக்கு) 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததோடு, அதற் முதற் கட்டமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் அண்மையில் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.