முதியோர் கொடுப்பனவுகளை பெறுவதில் தாமதம்

மலையகத்தில் முதியோர்களுக்கான செப்டம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமையால் முதியவர்கள் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுவிடயமாக அஞ்சல் அலுவலக அதிகாரியிடம் கேட்டபோது முதியோர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவதாகவும் முறையான விளக்கங்களைப் பெற்று வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் சரியான திகதியை அறிந்து வருவதன் மூலம் வீணான சிரமங்களை உள்ளவரை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் முதியோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாதாந்தம் 25 ஆம் திகதி தங்களது கொடுப்பனவுகளைபெற்று செல்லுமாறும் ஏனைய நாட்களில் வந்து காத்திருக்க வேண்டாம் என முதியவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் .