18 வயதுக்கு குறைந்த சிறுவர்களை மரண தண்டனையிலிருந்து விலக்க புதிய திருத்தம் சமர்ப்பிக்க முடிவு

கடும் குற்றங்களுக்காக குற்றவாளியாக்கப்படும் 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களை மரண தண்டனைக்கு உட்படுத்துவதில்லை என்றும் அது தொடர்பில் புதிய திருத்தங்களை பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப் போவதாகவும் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் குற்றவியல் தண்டனை சட்டத்தில் திருத்தங்களை இணைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றம் ஒன்றை புரியும் நிலையில் நபரொருவர் 18 வயதுக்கு குறைவானவராகக் காணப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிப்பது மற்றும் அதனை நிறைவேற்றுவதை தவிர்க்கும் வகையில், அதற்குப் பதிலாக வேறு பொருத்தமான தண்டனைகளை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய திருத்தங்கள் மூலம் விடயங்கள் முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் விடயங்களை ஆராய்ந்துள்ள விஷேட குழுவின் தீர்மானத்திற்கு அமைய திருத்தத்தை சமர்ப்பிக்க உள்ளதாகவும் நீதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்