சா/த பரீட்சையில் புலி சந்தேக நபர் ஒருவர் உட்பட இருவர் சித்தி

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் தோற்றிய கைதிகளான விடுதலைப்புலிகள் சந்தேக நபர் ஒருவரும் மற்றுமொருவரும் சிறப்பு சித்தி பெற்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் சந்தேகநபராக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் மூன்று 'பீ' யுடன் சித்தி பெற்றுள்ளதாகவும் மற்றைய சந்தேக நபர் மூன்று 'ஏ' யுடன் சித்தி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பரீட்சையில் கிடைத்த வெற்றியானது கைதிகளின் எதிர்கால வளத்துக்காக சிறைச்சாலை திணைக்களம் முன்னெடுத்துச் செல்லும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு கிடைத்த மற்றுமொறு வெற்றியென சிசை்சாலை ஆணையாளர் ( நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.