மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்புவோருக்கு இலவச PCR

மூன்று மாதகாலத்துக்கு பரீட்சார்த்த திட்டம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சேவைக்கு சென்று நாடு திரும்புபவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் செய்வதற்கான செலவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இது மூன்று மாதத்திற்கு பரீட்சார்த்த வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா தெரிவித்துள்ளார்.