அமீரகத்தில் முகக்கவசம் அணியும் கட்டுப்பாடுகளில் தளர்வு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் முகக்கவசம் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

எக்ஸ்போ 2020 சர்வதேச கண்காட்சி அடுத்த மாதம் அங்கு நடக்கவிருக்கும் நேரத்தில் புதிய அறிவிப்பை ஐக்கிய அரபு இராச்சியம் வெளியிட்டுள்ளது.

தற்போது அங்கு கொவிட்-19 நோய்த்தொற்றுச் சம்பவங்களும் குறைய ஆரம்பித்துள்ளன.

பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவது இதற்குமுன் கட்டாயமாக இருந்தது. இனி பொது இடங்களில் உடற்பயிற்சி செய்யும் போதும், கடற்கரை, முடிதிருத்தும் இடங்களிலும் இரண்டு மீற்றர் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடித்தால் முகக்கவசம் அணியத் தேவையில்லை.

எங்கெங்கு முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற அறிவிப்புப் பலகைகளும் பொது இடங்களில் வைக்கப்படவுள்ளன.

ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள எக்ஸ்போ 2020 கண்காட்சி 25 மில்லியன் வருகையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.