பிரேசிலின் சுகாதார அமைச்சர் மார்செலோவுக்கு கொரோனா தொற்று

பிரேசில் நாட்டின் சுகாதார அமைச்சர் மார்செலோ க்வெரோகா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரோய்ட்டர்ஸ் முகாமையில் செய்தி வெளியாகியுள்ளது.

அவர் கடந்த செவ்வாய்கிழமை, பிரேசில் ஜனாதிபதி சயீர் போல்சனாரோவை அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் இருக்கும் ஐ.நா பொது சபைக்கு அழைத்து வந்த சில மணி நேரங்களுக்குப் பின் இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.