ஐ.பி.எல் வீரருக்கு கொரோனா

இந்திய பிரீமியர் லீக் தொடரின் அணிகளில் ஒன்றான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான தங்கராசு நடராஜனிற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

த.நடராஜனிற்கு அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில் கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து அவர் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் அவருடன் நெருங்கிப் பழகிய, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் ஏனைய வீரரான விஜய் சங்கர் மற்றும் அவ்வணியின் ஆதரவு உறுப்பினர்கள் ஐந்து பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஏனைய வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் வீரர்கள் எவருக்கும் கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதியாகாத நிலையில், நேற்று டுபாயில் நடைபெற்ற இந்திய பிரீமியர் லீக் தொடரின் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் அணிகள் இடையிலான 33ஆவது லீக் போட்டி, எந்தவித மாற்றமும் இல்லாமல் இடம்பெற்றது.