வருவாயில் மெஸ்ஸியை முந்துகிறார் ரொனால்டோ

2021-/22 பருவத்தில் மெஸ்சியை விட ரொனால்டோ அதிக வருமானம் ஈட்டும் நபராக இருப்பார் என போர்ப்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

ரொனால்டோ வரியுடன் 125 மில்லின் டொலர் சம்பளம் பெறும் நிலையில், மெஸ்சி 110 மில்லியன் டொலரே பெறுவார் எனத் தெரிவித்துள்ளது.

மெஸ்சி பார்சிலோனாவில் இருந்து பி.எஸ்.ஜி. அணிக்கும் ரொனால்டோ யுவான்டஸ் அணியில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கும் சென்றபின் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மான்செஸ்டர் யுனை​டெட் அணி ரொனால்டோவக்கு போனஸ் உடன் சேர்த்து 70 மில்லியன் டொலர் சம்பளம் கொடுக்கிறது. வணிக ஒப்பந்தம் மூலம் 55 மில்லியன் வருமானம் ஈட்டுகிறார். மெஸ்சி சம்பளம் மற்றும் போனஸ் மூலம் 75 மில்லியன் டொலர் ஈட்டுவார் எனத் தெரிவித்துள்ளது.