பூநகரி கெளதாரிமுனையில் 2015 கிலோ மஞ்சள் 30 கிலோ ஏலக்காய் மீட்பு!

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனையில் வெட்டுக்காடு பகுதியில் 2015 கிலோ  600 கிராம் மஞ்சள் மற்றும் 30 கிலோ 100 கிராம் ஏலக்காயும் பொலிஸாரால்  மீட்கப்பட்டுள்ளது.  

சூட்சுமமான முறையில் கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு வெட்டுக்காடு   பகுதியில் உள்ள சிறு காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட தகவல்   இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்ததையடுத்து பூநகரி   பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது இவை மீட்கப்பட்டுள்ளன. இங்கு 28 வயது சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  இக் கடத்தல் சம்பவம் 22ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.  

மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதோடு மீட் கப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காயையும் கைது செய்யப்பட்ட சந்தேக  நபரையும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது. 

கிளிநொச்சி குறூப் நிருபர்