12 - 19 வயதுக்குட்பட்ட தகுதியுடைய சிறுவர்களுக்கு Pfizer தடுப்பூசி

12 - 19 வயதுக்குட்பட்ட தகுதியுடைய சிறுவர்களுக்கு Pfizer தடுப்பூசி-Pfizer Dose for 12-19 Years-With Differently Abled Children-Sep 24

- இன்று முதல் கொழும்பு, அநுராதபுரம், குருணாகல் போதனாவில் ஆரம்பம்
- தகுதி: lrh.health.gov.lk/pfizer-indication
- பதிவுக்கு: forms.gle/yuaM1A1jEnSSdihV9

அரசாங்கத்தின் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் 12 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட விசேட தேவைகொண்ட மற்றும் நாட்பட்ட நோய்களைக் கொண்டுள்ள மற்றும் அது போன்ற அவசியம் கொண்ட சிறுவர்களுக்கு Pfizer தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (24) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த தகுதி கொண்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலை, அநுராதபுரம் மற்றும் குருணாகல் போதனா வைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கான முற்பதிவுகளை மேற்கொள்ள:
பதிவு: forms.gle/yuaM1A1jEnSSdihV9
(தற்போது இவ்வாரத்திற்கான பதிவுகள் நிறைவடைந்துள்ளதால் அடுத்த வாரத்திற்கான பதிவை ஞாயிற்றுக்கிழமை முதல் மேற்கொள்ளலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடுப்பூசியை பெற சிறுவர்கள் கொண்டிருக்க வேண்டிய தகுதிகள்: lrh.health.gov.lk/pfizer-indication