Friday, September 24, 2021 - 5:28pm
முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தையை செவ்வாய்க்கிழமை வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளது.
5 அடி நீளம் கொண்ட குறித்த பெண் சிறுத்தை புலி வேட்டைக்காக கட்டப்பட்டிருந்த தடத்தில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று பகல் குறித்த சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
குறித்த சிறுத்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர் வில்பத்து காட்டில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
பரந்தன் குறூப் நிருபர்