கெரவலபிட்டியில் 40 வீத பங்குகளே அமெரிக்காவுக்கு

மின்சக்தி அமைச்சர் காமினி தெரிவிப்பு

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் நிதி அமைச்சிற்கு உரித்துடைய 50 சதவீதத்தில் 40 சதவீத பங்கு முதலீட்டுக்காக மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. மாறாக அதனை விற்கவில்லை என்று மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இது தொடர்பில் அமைச்சரவையில் யாரும் கலந்துரையாடவில்லை. தேர்தல் கொள்கை பிரகடனத்தை முன்வைத்தபோதே சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தில் இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதை குறிப்பிட்டிருக்கின்றோம்.

நான் அறிந்த வகையில் அதனை விற்கவில்லை. அது நூற்றுக்கு நூறுவீதம் அரசாங்கத்திற்கு உரித்துடையதாகும் என்றார்.