பூஸ்டர் டோஸ்கள் குறித்து இன்னும் தீர்மானமில்லை

இராணுவத் தளபதி தெரிவிப்பு

இலங்கையர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை வழங்குவது குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் 12 முதல் 19 வயதுக்குட்பட்ட விசேட தேவையுடைய மற்றும் தீராத நோய்களுடன் இருக்கும் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த திட்டம் முதற்கட்டமாக இன்று முதல் கொழும்பு, அனுராதபுரம் மற்றும் குருணாகல் மாவட்டங்களில் செயல்படத் தொடங்கும்.

கொழும்பு மாவட்டத்தில் லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையிலும் ஏனைய மாவட்டங்களில் உள்ள கிளினிக்குகளிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.