ஸ்பெயின் எரிமலை வெடிப்பு தீவிரம்b பலரும் வெளியேற்றம்

ஸ்பெயினின் கேனரி தீவுகளில் எரிமலை வெடித்து அதன் குழம்பு அதிகமாக வெளியேறுவதால் அங்கு மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

லா பல்மா தீவிலுள்ள எல் பாசோ வட்டாரத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் முதன்முறை இந்த எரிமலை வெடித்துள்ளது. ஆபத்து அதிகமாக இருக்கும் சூழலில், எரிமலைக் குழம்பைக் காணக் காத்திருந்தவர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

எரிமலைக் குழம்பு கடலை நோக்கிச் செல்கிறது அது வழிமாறி வரும் பகுதியில் இருந்து தொடர்ந்து மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறினர்.

80,000 பேர் வசிக்கும் லா பல்மா தீவிலிருந்து இதுவரை சுமார் 6,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

இரண்டு நாளுக்கு முன் எரிமலை வெடித்தது. அதற்கு முன்னர், அத்தீவில் பலமுறை நில அதிர்வுகள் உணரப்பட்டன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் 103 ஹெக்டர் நிலப்பரப்பும் 300 வீடுகளும் நாசமாயின.

இந்த எரிமலைக் குழம்பு கடலில் விழும்போது இரசாயன மாற்றங்களால் வெடிப்பு மற்றும் நச்சு வாயு வெளியேற்றப்படக் கூடும் என்று உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளர்.