இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் ஜிம்மி கிரீவ்ஸ் மரணம்

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஜிம்மி கிரீவ்ஸ் உடல்நலக்குறைவால் நேற்றுமுன்தினம் அதிகாலை மரணம் அடைந்தார்.

அவருக்கு வயது 81. இங்கிலாந்து அணிக்காக 57 ஆட்டங்களில் விளையாடி 44 கோல்கள் அடித்துள்ள ஜிம்மி கிரீவ்ஸ் 1966-ம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் அங்கம் வகித்துள்ளார்.

அங்குள்ள டோட்டன்ஹாம் ஹாட்ஸ்புர் கழகத்துக்காக நீண்ட காலம் ஆடிய கிரீவ்ஸ் அந்த கிளப்புக்காக அதிக கோல்கள் (379 ஆட்டங்களில் 266 கோல்கள்) அடித்த பெருமைக்குரியவர் ஆவார்.