20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கல் இன்று (செப்டம்பர் 23) யாழ்ப்பாணம் தடுப்பூசி மையங்களில் முன்னெடுக்கப்பட்டன.
கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினரால் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மிகவும் திறமையாகவும், முறையாகவும் தொடர்வதற்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு இன்று (23) இலங்கை இராணுவத்தினர் பங்களித்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில், கொவிட்-19 பரவலை தடுக்கும் தெசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் மற்றும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவ வைத்திய படையினர் மற்றும் ஏனைய இராணுவ படையினர் இதற்காக பங்களிப்பு செய்து வருகின்றனர்.