இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர் படைப் பிரிவின் 27ஆவது வருட நிறைவு

இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர் படைப் பிரிவின் 27ஆவது வருட நிறைவு-No 7 Helicopter Squadron Celebrates 27 Years of Service

இலங்கை விமானப்படையின் இல 07 ஹெலிகொப்டர் படைப் பிரிவின் 27ஆவது வருட நிறைவு தினம் இன்று (23) கொண்டாடப்படுகின்றது.

ஹெலிகொப்டர் விமானிகளின் தொட்டில் என்று அழைக்கப்படும் இலங்கை விமானப்படையின் ஹிங்குராகொடை விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள இல 07 ஹெலிகொப்டர் படைப்பிரிவானது 1994ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடம் 2021 செப்டம்பர் 23ஆம் திகதியுடன் 27 வருட அர்பணிப்பான சேவையை பூர்த்தி செய்துள்ளது.

இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர் படைப் பிரிவின் 27ஆவது வருட நிறைவு-No 7 Helicopter Squadron Celebrates 27 Years of Service

இந்த படைப்பிரிவானது பெல் 212 மற்றும் 206 ஆகிய ஹெலிகொப்டர்களை கொண்டு கடந்த 1994 செப்டம்பர் 23ஆம் திகதி இல 401ஆம் படைப்பிரவாக ஆரம்பிக்கப்பட்டு மீண்டும் 1996 மார்ச் 23ம் திகதி இல 07ஆம் படைப்பிரிவாக பெயர் மாற்றம் அடைந்தது.

இந்த படைப்பிரிவினால் எமது தாய்நாட்டுக்காக அளப்பெரிய மகத்தான சேவைகள் ஆற்றப்பட்டுள்ளது என்பதில் ஐய்யமும் இல்லை மேலும் எமது நாட்டிற்காக முக்கியமான சந்தர்ப்பங்களில் தனது பங்களிப்பினை தொடர்ந்தும் வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர் படைப் பிரிவின் 27ஆவது வருட நிறைவு-No 7 Helicopter Squadron Celebrates 27 Years of Service

எமது நாட்டுக்காக இப்படைப்பிரினால் வழங்கப்பட்ட சேவையினை அங்கீகரிக்கும் வைகையில் இல 07 ஹெலிகொப்டர் படைப்பிரிவுக்கு 2019 மார்ச் 02ஆம் திகதி ஜனாதிபதி வர்ணம் வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது.

இல 07ஆம் படைப் பிரிவானது 365 நாட்களும் நாட்டிற்காக பொறுப்புடன் தயார் நிலையில் உள்ளது இப்படைப்பிரிவின் மூலம் தேடல் மற்றும் மீட்பணிகள், யுத்தகாலக்களில் மற்றும் அனர்தங்களின்போதும் காயப்பட்டோரை மீட்டு கொண்டுசெல்லும் பணிகள், வான் வழிமூலம் சரக்குப்பொருட்கள் மற்றும் படைவீரர்கள்களுக்கான விமான போக்குவரத்து பணிகள், பாரிய தீவிபத்துகளின் போது தீயணைக்க பம்மி தொட்டி மூலம் தீயணைக்கும் சேவை, போர் ரோந்து போக்குவரத்துகள், மேலும் மருத்துவ செயற்பாடுகள், மனிதாபினம பணிகள் அனர்த்த நிவாரண போக்குவரத்துக்கள், அடிப்படை ஹெலிகொப்டர் பயிற்சிகள், VIP போக்குவார்த்துசேவைகள், இரவு பார்வை கூகுள் பயிற்சிகள் (Night Vision Google) என்பன இடம்பெறுகின்றன.

இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர் படைப் பிரிவின் 27ஆவது வருட நிறைவு-No 7 Helicopter Squadron Celebrates 27 Years of Service

இந்த 27 வருட நிறைவை முன்னிட்டு இப்படைப்பிரிவினால் ஹிங்குரக்கொடையில் அமைந்துள்ள ''போஷத் சிறுவர் இல்லத்தில் " சிரமதானப்பணிகளும் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளும் மேலும் யுத்தத்தின் போது உயிர் நீத்த போர்வீரகளுக்காகவும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் ஆசிவேண்டி விசேட போதி பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர் படைப் பிரிவின் 27ஆவது வருட நிறைவு-No 7 Helicopter Squadron Celebrates 27 Years of Service