கொவிட்-19 நிதியத்திற்கு லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் குழுமத்தினால் ஒரு கோடி ரூபா நன்கொடை

கொவிட்-19 நிதியத்திற்கு லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் குழுமத்தினால் ஒரு கோடி ரூபா நன்கொடை-Lanka Hospitals Group Donates Rs 1 Crore to COVID19 Helathcare Fund

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் (Lanka Hospitals) குழுமம், கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு ஒரு கோடி (ரூ. 10 மில்லியன்) நன்கொடையை வழங்கியுள்ளது

குறித்த காசோலையை, அந்நிறுவனத்தின் குழும பிரதான நிறைவேற்று அதிகாரி தீப்தி லொக்கு ஆராச்சி நேற்று முன்தினம் (21) ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி அலுவலக பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. எகொடவெலேவிடம் வழங்கினார்.

கொவிட் நிதியத்திற்கு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் தங்களது பங்களிப்பு செய்து வரும் நிலையில், இந்தியதியத்திற்கு பங்களிப்புச் செய்ய விரும்புவவர்கள், காசோலை அல்லது தந்தி பரிமாற்றம் மற்றும் www.itukama.lk எனும் இணையதளம் மூலமாக பங்களிப்புகளை செய்ய முடியுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அத்துடன் #207# எனும் இலக்கத்தை அழைத்து நிதிக்கு பங்களிக்கலாம்.

மேலதிக தகவலுக்கு:
076 0700700
011 2320880
011 2354340
011 2424012