பாவனையாளர் அலுவல்கள அதிகாரசபை திருத்தச் சட்டம் உடன் அமுல்

பாவனையாளர் அலுவல்கள அதிகாரசபை திருத்தச் சட்டம் உடன் அமுல்-Speaker Endorses the Certificate on the Consumer Affairs Authority-Amendment-Bill

- சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்து

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன நேற்று (22) தனது கையொப்பத்தையிட்டு அதனை சான்றுறுதிப்படுத்தினார்.

இதற்கமைய 2003ஆம் ஆண்டு 09ஆம் இலக்கப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டம் நேற்று முதல் (22) நடைமுறைக்கு வருகிறது.

வர்த்தக அமைச்சரினால் 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 06ஆம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 2021 ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்தச் சட்டமூலம் நேற்று (22) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.

இந்தத் (திருத்தச்) சட்டமூலம், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் சில பொருட்களுக்கு உச்சபட்ச சில்லறை விலையை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்ட பின்னர், அந்தக் கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.