தடுப்பூசித் திட்டம் இறுதிக் கட்டத்தில்!

Dr. பிரசன்ன குணசேன தெரிவிப்பு

நாட்டில் தடுப்பூசித் திட்டம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது என அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவரான வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்குவதற்கு போதுமான தடுப்பூசிகள் நாட்டிற்கு வந்துள்ளன. 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கையின் மக்கள் தொகை 15.6 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை இதுவரை 31.7 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது, அது தகுதியானவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்க போதுமானது. எனவே, தடுப்பூசி அளவை திறம்பட நிர்வகிப்பதே தற்போதுள்ள பொறுப்பாகும் என அவர் தெரிவித்தார்.