இந்தியாவில் மூடப்படும் 05 ஆவது கார் கம்பனி; போராட்ட களத்தில் போர்ட் கார் ஊழியர்கள்

இந்தியாவில் பல கார் நிறுவனங்கள் விற்பனை இல்லாமல் தங்களது உற்பத்தியினை குறைத்து வருகின்றன. சில நிறுவனங்கள் இந்தியாவினை விட்டு வெளியேறி வருகின்றன. அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான போர்டு, தொடர்ந்து விற்பனையில் பெரும் சரிவினைக் கண்டு வருவதாகவும், இதனால் இந்தியாவில் உற்பத்தியினை நிறுத்த உள்ளதாகவும் அறிவித்தது.

மோசமான அளவில் நஷ்டம் விற்பனை சரிவினால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தினை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவினை பொறுத்தவரையில், வளர்ந்து வரும் மிகப்பெரிய சந்தை என்பதால், இங்கு பெரியளவில் இலாபம் ஈட்டலாம் என்ற கணிப்பில் பற்பல நிறுவனங்களும் தங்களது உற்பத்தி, விற்பனையை இங்கு தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. உற்பத்தி நிறுத்தம் ஆனால் தனது எதிர்பார்ப்பிற்கு மாறாக உள்ள நிலையில் நிறுவனங்கள் ஆலையை மூடிவிடுகின்றன.

அப்படித்தான் இந்தியாவில் நஷ்டத்தில் உள்ள இரு ஆலைகளை மூட உள்ளதாக ஃபோர்டு இந்தியா அறிவித்திருந்தது. ஃபோர்டு நிறுவனத்திற்கு சென்னையிலும், குஜராத்திலும் என இரு மிகப்பெரிய ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளைத் தான் மூடுவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பல ஆயிரம் பேர் பணியிழக்கும் நிலை

இதற்கிடையில் இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பல ஆயிரக்கணக்காக ஊழியர்கள், பணியிழக்கும் நிலை இருந்து வருகின்றது. இந்தியாவில் ஃபோர்டு தனது வாடிக்கையாளர்கள் சேவையைத் தொடர்ந்து செய்யும், இதேபோல் உதிரிப்பாகங்கள் மற்றும் வாரென்டி சப்போர்ட் ஆகியவையும் தொடரும். மேலும் ஸ்டாக் இருக்கும் வரையில் உற்பத்தி இருக்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் கூறியிருந்தது.

தற்போது கையிருப்பில் இருக்கும் வாகனங்களை விற்பனை செய்த பின்பு, ஃபோர்டு நிறுவனத்தின் பிரபல கார்களையும், எலக்ட்ரிக் எஸ்யூவி வாகனங்களையும் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனினும் ஏற்கனவே விற்பனை இல்லாமல் பெரும் நஷ்டத்தில் உள்ள டீலர்களுக்கு ஃபோர்டின் இந்த நடவடிக்கை இன்னும் நஷ்டத்தினையே கொடுக்கலாம் என்ற கருத்துகள் நிலவி வருகின்றன.

இது குறித்து FADA சமீபத்தில் ஃபோர்டு டீலர்கள் இந்த நிறுவனத்தின் அதிரடி முடிவால், அதன் தாக்கத்தினை உணர்வார்கள். அவர்கள் மிகப்பெரிய நஷ்டத்தினை காணலாம். ஃபோர்டு நிறுவனத்தின் இந்த முடிவு மிக அதிர்ச்சி அளிப்பதாகவும், நாடு முழுவதும் சுமார் 40,000 பேரை பணியமர்த்தியிருக்கும் டீலர்கள், உள்கட்டமைப்புக்காக 2,000 கோடி ரூபாய்க்கு மேல் உள்கட்டமைப்புகாக முதலீடு செய்துள்ளனர். அது என்னாவது என்ற கேள்வியையும் எழுப்பி இருந்தது.

ஊழியர்கள் அதிர்ச்சி

இதற்கிடையில் மேற்கண்ட உற்பத்தி நிறுத்தப்படவுள்ள ஆலையில் பணிபுரியும்,பல ஆயிரம் பேர் தங்களது வேலையினை இழக்கும் சூழ்நிலை இருந்து வருகின்றது. இதற்கிடையில் குஜராத் ஆலையில் பணிபுரியும் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் தங்களது நிறுவனம் வெளியேறுவதாக அறிவித்ததையடுத்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஊழியர்கள்

குஜராத்தின் சனந்த் நகரில் உள்ள ஃபோர்டின் கார் உற்பத்தி மற்றும் எஞ்சின் தயாரிக்கும் ஊழியர்கள் நீல நிற சீருடையுடன், ஆலை மூடுவது குறித்து போரட்டத்தில் குதித்துள்ளனர். இது தங்களது வாழ்வாதாரத்தினை இழக்க வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளனர்.

தொடர்ந்து ஏழு வருங்டங்களாக இங்கு பணிபுரிந்து வந்த நிலையில், திடீரென இங்கு வேலை இல்லை என்று கூறப்படுகின்றது. இதனால் எங்களின் எதிர்காலம் என்ன? என தொழிலாளர்களின் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. ,மேலும் அரசுக்கும் நிறுவனத்திற்கும் எங்களது கோரிக்கை ஆலையை மூடக்கூடாது என்பது தான். பணியில் முன்னுரிமை வேண்டும்? அப்படி மூடப்பட்டால் இங்கு வரும் வேறு ஆலைகளில் எங்களுக்கு பணியில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இந்த ஆலையில் சுமார் 1,200 பேர் பணிபுரிகின்றனர் என்றும் ஃபோர்டு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்தியா உள்பட வளர்ந்து வரும் சந்தைகளில் உற்சாகமான போக்கு இருந்தாலும், பெரிய வாகன நிறுவனங்கள் ஒரு தேக்க நிலையில் உள்ளன. இந்த நிலையில் தான் ஃபோர்டு நிறுவனமும் நஷ்டத்தினை எதிர்கொண்டுள்ளது.

சமீபத்தில் வாகன உற்பத்தியாளர்கள் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில், வேலையின்மை விகிதம் மோசமாகியுள்ளது. வேலையை உருவாக்குவோம் என்று கூறும் ஆட்சியாளர்களுக்கு, இது மிகப்பெரிய சவால் தான். ஏனெனில் கடந்த 2017 முதல் ஜெனரல் மோர்ட்டார்ஸ், மேன் டிரக்ஸ், ஹார்லி டேவிட்சன், யுஎம் லோஹியா, மல்டிபிளை பை நைட் எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்கு பிறகு, போர்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறும் 5 வது மிகப்பெரிய, ஆட்டோமொபைல் சார்ந்த நிறுவனமாகும். எதிர்காலத்தில் என்ன செய்வோம்? இதனால் மோசமான பணியிழப்பும் இருக்கும். என்றும் கூறியுள்ளனர்.