திருப்பதி தரிசனத்துக்கு விரைவு டிக்கட் இன்று இணையதளத்தில்

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் விரைவு தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.

திருமலை ஏழுமலையானை அடுத்த மாதம் தரிசிப்பதற்காக 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை, 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

இதற்கு முன் ஏற்பட்ட அனைத்து தொழில்நுட்ப பிரச்சினைகளும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளதால், இனி பக்தர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையையும் தேவஸ்தானம் உயர்த்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.