சஜித் கூட்டணிக்குள் குழப்பமான நிலை

மனோ அணி வெளியேறும்?

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், தாம் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகத் தயங்கப்போவதில்லை என் அக் கூட்டணியின் தலைவரான மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி இதுவரை ஐக்கிய மக்கள் சக்தியின் கீழான கூட்டணியில் இணைந்து செயற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியிடம் சில கோரிக்கைகளை வைத்திருப்பதாகவும், அவை நிறைவேற்றப்படாத பட்சத்தில், வரும் தேர்தல்களில் தனித்தே போட்டியிடவிருப்பதாகவும் மனோ கணேசன் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.