த.தே.கூ. வசமிருந்த வல்வெட்டித்துறை நகர சபைக்கு சுயேட்சை குழு உறுப்பினர் சபாரத்தினம் தலைவர்

த.தே.கூ. வசமிருந்த வல்வெட்டித்துறை நகர சபைக்கு சுயேட்சை குழு உறுப்பினர் சபாரத்தினம் தலைவர்-TNA Owned Valvettithurai Pradeshiya Sabha Chairmanship-S Selvendira Elected

த.தே.கூ. வசமிருந்த வல்வெட்டித்துறை நகர சபைக்கு சுயேட்சை குழு உறுப்பினர் சபாரத்தினம் தலைவர்-TNA Owned Valvettithurai Pradeshiya Sabha Chairmanship-S Selvendira Electedவல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா தெரிவாகியுள்ளார்.

ஒரு மேலதிக வாக்கினால் அவர் வெற்றிபெற்றார்.

வல்வெட்டித்துறை நகர சபை தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கொவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே புதிய தலைவர் தெரிவு இடம்பெற்றது.

வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. சுயேட்சைக் குழு 4 உறுப்பினர்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி என்பன தலா 2 உறுப்பினர்களையும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா ஒரு உறுப்பினர்களுமென மொத்தமாக 17 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு அமர்வு இன்று (22) முற்பகல் 10.00 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம. பற்றிக் டிரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது.

இன்றைய அமர்வு கடுமையான சுகாதார நடைமுறைகளுக்கு உள்பட்டு நடத்தப்பட்டது.

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ரெலோ உறுப்பினர் சதீஸ் 8 வாக்குகளையும் சுயேட்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்ட செல்வேந்திரா 9 வாக்குகளையும் பெற்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பான உப தவிசாளர், சுயேட்சைக் குழுவுக்கு சார்பாக வாக்களித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(பருத்தித்துறை விசேட நிருபர் - நிதர்ஷன் வினோத்)