ரி 20 தலைவர் பதவியிலிருந்து விலகும் விராட் கோலி

கிரிக்கெட் என்பது எப்போதுமே ‘ஒரு விளையாட்டிற்கும் அப்பாற்பட்ட மகத்துவம் கொண்டது.’ இது ஒவ்வொரு இலங்கையரின் வாழ்க்கையில் ஒரு அங்கம் மட்டுமல்ல, அண்மைக்கால வரலாற்றை எடுத்துக்கொண்டால் இலங்கையின் உற்சாக உணர்வின் உச்ச பிரதிபலிப்பு என்பதையும் காண்பித்துள்ளது. பெரும்பாலான இலங்கையர்கள் மிக இளம் வயதிலேயே கிரிக்கெட்டின் அனுபவத்திற்கு ஆளாகிறார்கள், அது அவர்களின் சிறுபராயத்தில் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும், பின்னர் பெரியவர்கள் ஆக வளர்ந்ததும் தாம் ஆதரவை வழங்கும் அணியின் வீரர்கள் எல்லைக்கோட்டுக்கு வெளியில் அடிக்கும் ஒவ்வொரு பந்திற்கும், எதிரணியின் விக்கெட் வீழ்த்தப்படும் ஒவ்வொரு தடவையும் ஆடியும், பாடியும் ஆரவாரத்துடனும், உற்சாகப்படுத்தியும் தமது உணர்வை வெளிப்படுத்தி மகிழ்கின்றனர்.

ஒரு தேசம் என்ற வகையில் கிரிக்கெட் என்பது இலங்கையின் பாரம்பரியத்தில் ஒரு வலுவான அங்கமாகும்.

1996 உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட பின்னர் இலங்கையை 'உலக சாம்பியன்கள்” என்ற மையப்புள்ளியில் உயர்த்தி, முழு உலகின் கவனத்தையும் இலங்கை தன்பால் ஈர்ப்பதற்கு வழிவகுத்தது. கிரிக்கெட் விளையாட்டு எப்போதுமே இந்த நாட்டில் அனைத்து மட்டத்திலும் மக்களை மகத்தான அளவில் ஐக்கியப்படுத்துவதுடன், அதே சமயம் நமது சிங்கங்களே எங்கள் மிகப்பெரிய பெருமை என்று தொடர்ந்து நம்பும் இலங்கையர்களை ஒன்றிணைக்கிறது. இதேபோல், டயலொக் நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இலங்கையை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன், விளையாட்டு திறமை கொண்டவர்களுக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் அவர்களின் வெற்றியிலும், தோல்வியிலும் எப்போதும் பங்குகொண்டு கிரிக்கெட் வீரர்களின் திறமைகள் மற்றும் ஆற்றல் மீது நம்பிக்கை கொண்டு அதனை வளர்ப்பதற்கு தனது ஆதரவை வழங்கி வருகிறது.

கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும் அறிந்து, இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்த “Dialog - SLC Invitational T20 League” சுற்றுப்போட்டி கடந்த செவ்வாய்க்கிழமையன்று நிறைவடைந்தது. தசுன் ஷானக தலைமையிலான இலங்கை கிரிக்கெட்டின் GREYS அணி, இலங்கை கிரிக்கெட்டின் REDS அணியை வீழ்த்தி, Dialog - SLC Invitation T20 League சுற்றுப்போட்டியின் சாம்பியனாக முடிசூடியது. இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக GREYS அணியின் மினோத் பானுக அவர்களும், GREYS இன் அணித் தலைவரான தசுன் ஷானக அவர்கள் சுற்றுப்போட்டித் தொடரின் சிறந்த வீரராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

‘ஐசிசி இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணம்’ போட்டிக்காக அவர்களைத் தயார்படுத்தும் போட்டியாகவே இது அமைந்தது. இந்த சுற்றுப்போட்டி மூலம் புதிய திறமைசாலி வீரர்களை அடையாளம் காண உதவுவதற்காக டயலொக் நிறுவனம் இலங்கை கிரிக்கெட் சபையுடன் கைகோர்த்து செயற்பட்டுள்ளது. நாடெங்கிலும் அனைத்து வீரர்களுக்கும் தமது திறமைகளை வெளிப்படுத்தி, அடுத்த மட்டத்திற்கு செல்வதற்கான போதிய சம வாய்ப்பினை வழங்கும் நோக்குடன் இச்சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அனைத்து இலங்கையர்களின் இதயங்களிலும் அபிமானம் பெற்றுள்ள அணிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதன் மூலம் இலங்கை கிரிக்கெட்டுடன் ஒரு தசாப்த கால கூட்டாண்மையை ஏற்படுத்தி, அதனை சிறப்பாக முன்னெடுத்துள்ள டயலொக், இந்த சுற்றுப்போட்டிக்கு வலுவூட்டுவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள நாளைய வெற்றியாளர்களுக்கு வலுவூட்டும் என்று நம்புகிறது.

கிரிக்கெட் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய கிரிக்கெட் அணிகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் நீண்டகால இலக்கின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் இந்த முயற்சியின் மையமாக உள்ளதாக டயலொக் நம்புவதுடன், மற்றும் எங்கள் தேசத்தின் பேரார்வமான கிரிக்கெட்டின் உறுதியான ஆதரவாளராக இருக்க நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பு எப்போதும் இருக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.