துவிச்சக்கரவண்டியில் கசிப்பு கடத்திய தம்பதியினர் கைது

துவிச்சக்கர வண்டியில் கசிப்பு கடத்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 7 1/2 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை(17) காலை 7 மணி அளவில் காங்கேசன்துறை வீதி ஊடாக உடுவிலுக்கு கசிப்பு கடத்தப்படுவதாக மல்லாகம் மதுவரி நிலையத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சுன்னாகம் பகுதியில் மதுவரி நிலையத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது துவிச்சக்கர வண்டி ஒன்றை மறித்து சோதனையிட்டனர்.

இதன் போது புத்தகப்பை ஒன்றில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட ஏழு அரை லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டது. கணவன் துவிச்சக்கர வண்டியை செலுத்த மனைவி புத்தகப்பையை பின்னிருக்கையில் சூட்சுமமான முறையில் எடுத்துச் சென்றமை தெரியவந்தது. இதனை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(நாகர்கோவில் விஷேட நிருபர்)