12 வயது விசேட தேவையுடைய சிறுவர்கள், 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு Pfizer

12 வயதுக்கு மேற்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்கள்; 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு Pfizer-Pfizer Dose for 12 Years Above Differently Abled Children & Above 15 Year

15-19 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட விசேட தேவை உடைய சிறுவர்களுக்கு Pfizer தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் தெரிவித்தனர்.

இதேவேளை, ஊரடங்கு காலப் பகுதியில் பொதுமக்கள் தங்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற தடுப்பூசியை மிக விரைவாக பெற்றுக் கொள்ளுமாறு, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

 

 

ஏற்கனவே 20 தொடக்கம் 29 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. முதன் முதலில் கடந்த செப்டெம்பர் 06ஆம் திகதி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மாவட்டங்களிலும் அதன் பின்னர் மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.