ஓகஸ்ட் 20 இல் அமுலான தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் 01 வரை நீடிப்பு

ஓகஸ்ட் 20 இல் அமுலான தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் 01 வரை நீடிப்பு-COVID19 Quarantine Curfew Extended Till October 01-Keheliya-Rambukwella

- எந்தெந்த நிறுவனங்கள் திறக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்படும்
- அரசின் அத்தியாவசிய சேவைகள் நடைமுறையில்
- சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிக்கவும்

தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

இன்று (17) முற்பகல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொவிட்-19 ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தை தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

இதேவேளை பொருளாதாரத்தில் பங்களிப்புச் செய்யும் அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகள் யாவும் நடைமுறைப்படுத்தப்படுமென தெரிவித்துள்ள அவர், இது தொடர்பிலான மேலதிக விடயங்கள விரைவில் அறிவிக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கமைய,  பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யும் எந்தெந்த அரசாங்க நிறுவனங்கள் திறக்கப்பட வேண்டுமென்பது தொடர்பில் பசில் ராஜபக்‌ஷவுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

தடுப்பூசி செலுத்தாதோர் இக்காலப் பகுதியில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமைச்சர், எப்போதும் முகக்கசவசத்தை அணியுமாறும், வீட்டிலேயே தங்கியிருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் கொவிட்-19 தொடர்பான தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு...

PDF File: