கப்ராலின் இடத்திற்கு கெட்டகொட; மீண்டும் எம்.பியாக பெயரிட்டு வர்த்தமானி

கப்ராலின் இடத்திற்கு கெட்டகொட; மீண்டும் எம்.பியாக பெயரிட்டு வர்த்தமானி-Jayantha Ketagoda Named as MP-Extraordinary Gazette Released

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இராஜினாமா செய்தமை காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியாக ஜயந்த கெட்டகொடவை நியமிப்பது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமனம் பெற்றுள்ள அஜித் நிவார்ட் கப்ரால், கடந்த செப்டெம்பர் 13ஆம் திகதி தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வாய்ப்பை வழங்கும் வகையில், தனது தேசியப்பட்டியல் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை பரிந்துரை செய்து,  ஶ்ரீ.ல.பொ.பெ. கட்சியினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உரிய விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

PDF File: