நாவலப்பிட்டியில் சடலம் மீட்பு

நுவரெலியா மாவட்டத்தில் மகாவலி ஆற்றிலிருந்து வயோதிப்பெண் ஒருவரின் சடலமொன்றை நாவலப்பிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஆறு பிள்ளைகளின் தாயான 84 வயதுடைய நாவலப்பிட்டி டேலி வீதியை சேர்ந்த ஹெகலின்னாரங்கல என்பவரே நேற்றுமுன்தினம் 14/09/2021 இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்த தாய் காணாமல் போயுள்ளதாக நாலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அவரது மகள் முறைப்பாடு செய்திருந்தார்.பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் நாவலப்பிட்டி பத்துருபிட்டிய பகுதியிலுள்ள மகாவலி ஆற்றிலிருந்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாலப்பிட்டி பொலிஸார் சடலத்தை மீட்டு நீதவான் நீதிமன்ற நீதிபதி மிலந்த விமலரத்ன முன்னிலையில் மரண விசாரணை இடம்பெற்று பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்