அப்பிள் பொருட்களுக்கு அவசரகால அப்டேட்கள்

iPhone, iPad, அப்பிள் கைக்கடிகாரம் மற்றும் மெக் கணனிகள் போன்றவை Pegasus Spyware (பெகசஸ் உளவு மென்பொருள்) தாக்குதலுக்கு உள்ளாகும் மோசமான ஆபத்தை தடுக்க, அப்பிள் நிறுவனம் அவசரகால மென்பொருள் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 165 கோடி பேர் அப்பிளின் டிஜிட்டல் உபகரணங்களை பயன்படுத்துகின்றனர். இதில் சவூதியைச் சேர்ந்த ஒருவரின் ஐ-போனில் பெகசஸ் உளவு மென்பொருள் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு அப்டேட்டை உருவாக்கும் பணியில் ஆப்பிளின் பாதுகாப்பு குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஐபோன் வாடிக்கையாளர்கள் தாங்கள் பெகசஸ் உளவு பார்க்கப்படாமல் இருக்க புதிய மென்பொருள் அப்டேட்களான iOS 14.8, MacOS 11.6 , WatchOS 7.6.2. ஆகியவற்றை தரவிறக்கம் செய்துகொள்ளுமாறு அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.