அசாத் சாலியின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு

அசாத் சாலியின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு-Bail Application of Azath-Salley Rejected

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (14)  குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை நீதவான் நிராகரித்தார்.

மாவனல்லையில் புத்தர் சிலைகளை உடைத்த சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் 09 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நாட்டின் சட்டம் மற்றும் முஸ்லிம் சட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதாக தெரிவித்து, கடந்த மார்ச் 16ஆம் திகதி அசாத் சாலி CIDயினால் கைது செய்யப்பட்டிருந்தார்.