மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

சுயதனிமை ஊரடங்கு சட்டத்தை மீறி கெசல்கமுவ ஓயா ஆற்றில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வரை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொகவந்தலாவை பொகவான தோட்டத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு நேற்றுமுன்தினம் 12/09 கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து ஹற்றன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்