அஜித் நிவார்ட் கப்ரால் செப். 15 முதல் மத்திய வங்கியின் ஆளுநராக நியமனம்

அஜித் நிவார்ட் கப்ரால் செப். 15 முதல் மத்திய வங்கியின் ஆளுநராக நியமனம்-Ajith Nivard Cabraal Appointed as CBSL Governor From September 15

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை மறுதினம், செப்டம்பர் 15, 2021 முதல் அமுலுக்கு வரும் வகையில், அஜித் நிவார்ட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.

அஜித் நிவார்ட் கப்ரால் ஒரு சிரேஷ்ட பட்டய கணக்காளர் என்பதுடன், அமைச்சின் செயலாளராகவும், மத்திய வங்கியின் ஆளுநராகவும் சுமார் 9 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அஜித் நிவார்ட் கப்ரால் இன்றையதினம் (13) தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்துள்ளதோடு, அவரது இடத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்கும் பரிந்துரையை, ஶ்ரீ.ல.பொ.பெ. கட்சியானது, தேர்தல் செயலகத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.