ஆப்கான், இந்திய எல்லைகளில் செயற்கைக்கோள் விமான தளங்களை பாகிஸ்தான் செயற்படுத்துவதாக தகவல்

PAK-IND Border Issue

பாகிஸ்தான் உளவு அமைப்புகள் ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் நேரடியாகவும் வெளிப்படையாகவும் தலையீடு செய்து வரும் நிலையில் பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தானுக்கு அருகில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் ஒரு விமான தளமொன்றை செயல்படுத்தி வருவதாக ஏஎன்ஜ செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது .

அத்தோடு கோட்லி மற்றும் ராவல்கோட் என்ற இரண்டு செயற்கைக்கோள் தளங்கள் இந்திய எல்லையில் இயங்கி வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பாகிஸ்தான் விமானப்படை 12 செயற்கை கோள் தளங்களை செயற்படுத்தி வருவதாக அறிய வருகிறது.

''பாகிஸ்தான் விமானப்படை இந்த தளங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருவதோடு அவற்றின் அலைவரிசைகளும் அதிகரித்துள்ள அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய முகவரமைப்புகள் பாகிஸ்தானின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

அதன் தளங்கள் இந்திய ராடார்கள் மற்றும் ஏனைய கட்டமைப்புகளால் கண்காணிக்கப்படுகிறது. பாகிஸ்தான் கிழக்கு பிரதேசத்தில் அந்நாட்டு விமானப்படை நடவடிக்கைகளையும் இந்திய முகவரமைப்புகள் கண்காணித்து வருகின்றன. பாகிஸ்தானில் ஷம்சி விமானத்தளம் தாலிபான்களுக்கு ஆதரவாக மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருதாக இதன் போது அறிய வருகிறது.

ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் எதிரான தலிபான்களின் போராட்டத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்களுக்காக ஷம்சி விமானநிலையத்தை கடந்த காலங்களில் அமெரிக்கப் படைகள் பயன்படுத்தி வந்தது. ஆனால்அமெரிக்க விமானத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவப் படையினர் கொல்லப்பட்டதை அடுத்து இஸ்லாமாபாத்திற்கு அதை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.