இராஜினாமா செய்யும் கப்ராலின் இடத்திற்கு இராஜினாமா செய்த ஜயந்த கெட்டகொட

இராஜினாமா செய்யும் கப்ராலின் இடத்திற்கு இராஜினாமா செய்த ஜயந்த கெட்டகொட-Jayantha Ketagoda Replace State Minister Ajith Nivard Cabraal's MP Seat

- பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்று இராஜினாமா கையளிப்பு

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இராஜினாமா செய்வதால் ஏற்படும் தேசியப் பட்டியல் எம்.பி. வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜயந்த கெட்டகொட, தற்போது நிதியமைச்சராக உள்ள பசில் ராஜபக்‌ஷவுக்கு தனது ஆசனத்தை வழங்குவதற்காக எம்.பி. பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எம்.பி. பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ள அஜித் நிவார்ட் கப்ரால், மிக விரைவில் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.