தடம் புரண்ட செங்கல் லொறி விபத்து

தடம் புரண்ட செங்கல் லொறி விபத்து-Sand Brick Lorry Accident

நயினாகாட்டிலிருந்து செங்கல் ஏற்றிவந்த ரிப்பர் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் பாரியசேதம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் காரைதீவு பிரதானவீதி யில் இன்று (11) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றது.

நயினாகாட்டிலிருந்து கல்முனை நோக்கி செங்கல் ஏற்றிக்கொண்டு வந்தகொண்டிருக்கையில் காரைதீவு கந்தசுவாமி ஆலயமுன்ளாலுள்ள பிரதானவீதியில்வைத்து திடிரென டயர் வெடித்து இவ்விபத்து சம்பவித்துள்ளது.

தடம் புரண்ட செங்கல் லொறி விபத்து-Sand Brick Lorry Accident

திடிரென டயர்வெடித்தகாரணத்தினால் வேகமாகவந்த லாறி ஆலயத்திற்கு முன்னாலுள்ள வீட்டு மதிலில் மோதி தடம்புரண்டது.. மதில் சுக்குநூறாக உடைந்தது. ஏற்றிவந்த செங்கல் அனைத்தும் வீதியில் சிதறியது.

எனினும் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. காரைதீவுப்பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(காரைதீவு குறூப் நிருபர் - வி.ரி. சகாதேவராஜா)