இன்று நாட்டின் 22 மாவட்டங்களில் 257 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 22 மாவட்டங்களில் 257 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-257 Vaccination Centers-22 Districts-Sep-06

- மேலும் ஒரு இலட்சம் Pfizer தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன
- மேல் மாகாணம், காலியில் 20-29 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (06) நாடு முழுவதும் 17 மாவட்டங்களிலும் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 257 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மாத்திரம் 20 - 29 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன.

அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தபானத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு இலட்சம் Pfizer கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் இன்று (06) காலை வந்தடைந்தன.

சுமார் 550 கி.கி. எடை கொண்ட இத்தொகுதியானது, கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் இன்று அதிகாலை 1.45 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது.

நேற்று (05) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)

இன்று (06) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

PDF File: 

Add new comment

Or log in with...